புதிய மெனிங் சந்தையில் 7 பேருக்கு தொற்று!

பேலியகொடை பகுதியில் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட புதிய மெனிங் சந்தையில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மெனிங் சந்தையில் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அப்பகுதிக்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

கடந்த 30 ஆம் திகதி பேலியகொடை புதிய மெனிங் சந்தையின் வர்த்தக நிலைய உரிமையாளர்கள், ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட எழுமாறான 120 பி.சி.ஆர். பரிசோதனைகளின் போதே, 7 கொரோனா தொற்றாளர்கள் கண்டு பிடிக்கப்பட்டதாக அப்பிரதேசத்திற்குப் பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் மேலும் தெரிவித்தார்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 7 கொரோனா தொற்றாளர்களும் மேலதிக பரிசோதனைக்காக கொரோனா சிகிச்சை மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here