சு.க விரும்பினால் தனித்து போட்டியிடலாம்!

இலங்கை பொதுஜன பெரமுன கூட்டணியிலுள்ள எந்தவொரு கட்சியும் மாகாண சபைத் தேர்தலில் தனித்து போட்டியிடலாம் என்று இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம கூறுகிறார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய இராஜாங்க அமைச்சர், தனித்து போட்டியிடும் பங்காளி கட்சிகளின் நடவடிக்கையை பெரமுன எதிர்க்காது என்றார்.

பொதுஜன பெரமுன ஒரு வலுவான கட்சி. இது இலங்கை சுதந்திரக் கட்சியாக இருந்தாலும் அல்லது வேறு ஏதேனும் இணைந்த கட்சியாக இருந்தாலும், அவர்கள் மாகாண சபை தேர்தலில் தனித்து போட்டியிடலாம்.

பெரமுனவுடன் இணைந்த கட்சிகள் நியாயத்துடன் சமமாக நடத்தப்படும். கட்சிகளுக்கு இடையில் சமமான அணுகுமுறையை கடைப்பிடிப்போம் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here