பதிவு செய்யப்படாத சனிடைசர்கள் விற்பனைக்கு தடை!

தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையில் பதிவு செய்யப்படாத கை சுத்திகரிப்பு திரவ (சனிடைசர்) தயாரிப்புகளை இறக்குமதி செய்வதையும், பங்குகளை வைத்திருப்பதையும் அல்லது சில்லறை விற்பனை செய்வதையும் தடைசெய்து அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டது.

குறித்த வர்த்தமானி அறிவித்தல் 2021 பெப்ரவரி 01 ஆம் திகதி தொடக்கம் அமுலுக்கு வருவதாக குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வர்த்தமானி அறிவிப்பை நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர் மேஜர் ஜெனரல் சாந்த திசாநாயக்க வெளியிட்டுள்ளார்.

வர்த்தமானி அறிவிப்பின்படி, தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகார சபையில் பதிவு செய்யப்பட்ட சுத்தகரிப்பு திரவ போத்தல் பொதிகளில் அல்லது கொள்கலனில் பதிவு எண் தெளிவான இடத்தில்  காட்டப்படும். அப்படி இல்லாத கை சுத்திகரிப்கு திரவங்களை இறக்குமதியாளர், உற்பத்தியாளர், விநியோகஸ்தர் அல்லது வர்த்தகர் இறக்குமதி செய்யவோ, உற்பத்தி செய்யவோ, சேமிக்கவோ, விநியோகிக்கவோ அல்லது விற்பனை செய்யவோ, அல்லது விற்பனைக்கு வழங்கவோ, மொத்தமாக அல்லது சில்லறை விற்பனை செய்யவோ கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here