வடமராட்சியில் இளம்பெண் மாயம்!

வடமராட்சி அல்வாய் பகுதியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில் ஐந்து நாட்களாகியும் தகவல் கிடைக்காததால் குடும்பத்தாரால் பருத்தித்துறை பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பருத்தித்துறை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட அல்வாய் வடக்கு, சிறிலங்கா பாடசாலைக்கு அருகாமையில் அமைந்துள்ள கரித்தாஸ் முகாம் குடியிருப்பில் வசித்து வந்த வலித்தூண்டல் பகுதியை சேர்ந்த நிரூபன் கவிப்பிரியா (20) என்ற இளம் குடும்பப்பெண்ணே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

கடந்த 27 ஆம் திகதி இரவு 8.00 மணிக்கு அயலில் உள்ள சகோதரியின் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிச்சென்ற நிலையில் அங்கும் சென்றிருக்கவில்லை என்பதை அறிந்து அன்று இரவு 10.00 மணியளவில் குடும்பத்தாரால் பருத்தித்துறை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருமணமாகி ஏழு மாதமான நிலையில் இவ்வாறு காணாமல் போயிருந்த இளம் குடும்பப்பெண் இன்று வெள்ளிக்கிழமை மாலை வரை வீடு திரும்பாததுடன், அவரிடம் இருந்து எந்தவித தகவல்களும் கிடைக்காததால் குடும்பத்தினரிடையே அச்சமேற்பட்டுள்ளது.

காணாமல்போயிருந்தவர் சென்றிருக்கலாம் என்று கருதப்படும் இடங்களுக்கு பொலிஸாருடன் சென்று விசாரித்த நிலையில் இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லையென குறித்த பெண்ணின் தந்தை அந்தோனிப்பிள்ளை சிறீராஜ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த பெண் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் அது குறித்த தகவலை தெரியப்படுத்துமாறு அவரின் தந்தை (அந்தோனிப்பிள்ளை சிறீராஜ் – 0768498916) மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here