முன்னாள் அமைச்சர் மகேஸ்வரனின் 13வது நினைவு தினம்!

அமைச்சர் மகேஸ்வரனின் நினைவு தின நிகழ்வு வட்டுக்கோட்டையில் இடம்பெற்றது.

முன்னாள் இந்து கலாச்சார அமைச்சர் தியாகராஜா மகேஸ்வரனின் 13வது ஆண்டு நினைவு தினம் வட்டுக்கோட்டை தொகுதி காரியாலயத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் முன்னாள் அமைச்சரின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டு நினைவுரைகளும் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள் கலந்து கொண்டார்கள். தற்கால கொரோனா சூழ்நிலையை கருத்தில் கொண்டு மட்டுப்படுத்தப்பட்டவர்களுடன் குறித்த நிகழ்வு இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here