கொழும்பு, மாதிவெலவிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கான உத்தியோகபூர்வ இல்லத்தில் இப்போதும் தங்கியுள்ள ஐந்து முன்னாள் எம்.பி.க்கள் மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் துண்டிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பலமுறை அறிவித்தல் வழங்கியும், உத்தியோகபூர்வ குடியிருப்புக்களை மீள ஒப்படைக்காத 5 உறுப்பினர்களின் மின்சாரம், நீர் வழங்கலே துண்டிக்கப்பட்டுள்ளது.
இதுவரை உத்தியோகபூர்வ குடியிருப்புகளை ஒப்படைக்காத முன்னாள் எம்.பி.க்களில் பெரும்பாலோர் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.