புத்தர் சிலையை சேதமாக்கியவர் கைது!

மாவனெல்லை இம்புல பிரதேசத்தில் கடந்த 28 ஆம் திகதி இரவு புத்த சிலை ஒன்றிற்கு சேதம் ஏற்படுத்திய சந்தேகநபர் மாவனெல்லை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேகாலை, ஹெட்டிமுல்லை பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

பொலிஸ் ஊடக ​பேச்சாளர் மேலும் தெரிவிக்கையில்,

´பிரியந்த சமபத் குமார என்ற நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பேராதனை வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு சென்று திரும்பிய போது சிலையை சேதமாக்கியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவர் போதைப்பொருளுக்கு அடிமையான நபராவார். சந்தேகநபர் இதற்கு முன்னர் வணக்கஸ்தலம் ஒன்றில் உண்டியல் ஒன்றை உடைத்து திருடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் புத்தர் சிலைக்கு அருகில் இருந்து 60 ரூபாவினை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here