வாழைச்சேனையில் மீண்டும் தொற்று!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் கொரோனா தொற்று இணங்காணப்பட்டுள்ளதால் மூன்று வீதிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

ஓட்டமாவடி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனையின் மூலம் கொரோனா தொற்றாளர்கள் ஏழு பேர் இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து மக்களின் பாதுகாப்பு கருதி குறித்த நடவடிக்கை சுகாதாரப் பிரிவினரால் இடம்பெற்றுள்ளது.

இதில் ஓட்டமாவடி முதலாம் வட்டார கிராம சேகவர் பிரிவுக்குட்பட்ட பழைய மக்கள் வங்கி வீதி, கே.பீ.ஹாஜியார் வீதி, மௌலானா வீதி ஆகிய மூன்று வீதிகளே இவ்வாறு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

ஓட்டமாவடி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனையின் மூலம் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து ஆறு நபருக்கும், வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிண்ணையடி பகுதியில் உள்ள ஒரு நபருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் ஓட்டமாவடியைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு கொரோனா அடையாளம் காணப்பட்ட நிலையில் இவரது குடும்பத்தாருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனையின் மூலம் மேற்படி நபர்கள் இணங்காணப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஓட்டமாவடி பிரதேசத்தில் கொரோனா தொற்று இனங்காணப்பட்டவர்களின் வியாபார நிலையம் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளதுடன், மூடப்பட்ட வீதிகளில் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here