கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழையுடன் கூடிய வானிலை
நிலவியதால் வெள்ள நீர்கள் வழிந்து ஓட தொடங்கியுள்ளது இந்நிலையில் வெள்ள
நீர் வழிந்தோடுவதால் கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகக் உட்பட்ட
விளாவோடை பகுதிக்கு செல்லும் பாலம் மற்றும் கொங்கிரீட் பாதை ஆகியன வெள்ள
நீரினால் அரிக்கப்பட்டு உடையும் நிலையில் உள்ளது.
இவ்வாறு அரிப்புக்குள்ளான விளாவோடை வீதி மற்றும் பாலத் திணை
இராணுவத்தினர். மற்றும் கண்டாவளை பிரதேச செயலாளர் பிருந்தாகரன் ஆகியோர்
விஜயம் ஒன்றினை மேற்கொண்டு பார்வையிட்டதுடன் கிளிநொச்சி அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் மற்றும் இராணுவத்தினரின் உதவியுடன் தடுப்பணைகள் அமைத்து அரிப்பினை தடுப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.