பக்கத்து வீட்டு கள்ளக்காதலியிடம் செல்ல இரகசிய சுரங்கம் தோண்டிய ஆசாமி: கணவனிடமே சிக்கினார்!

அயல்வீட்டிலுள்ள தனது காதலியை சந்திக்க, இரண்டு வீட்டுக்குமிடையில் சுரங்கப்பாதை அமைத்திருந்த கில்லாடி பற்றிய செய்தி வெளியாகியுள்ளது.

இதன் மூலம், காதலி வீட்டிற்கு சென்று சரசம் பொழிந்து வந்த காதலன் இறுதியில் சிக்கியுள்ளார். அவர் சிக்கியது வேறு யாரிடமுமல்ல. காதலியின் சட்டபூர்வ கணவனிடமே!

வில்லாஸ் டெல் பிராடோ 1 பகுதியின் டிஜூவானா பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.

கட்டுமானத் தொழிலாளியான கில்லாடிக்கு ஆல்பர்டோ என ஊடகங்கள் பெயரிட்டுள்ளன. அயல்வீட்டு காதலியான பமீலா வீட்டிற்குள் இரகசியமாக சுரங்கத்தை உருவாக்கியுள்ளார்.

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், இந்த கள்ளக்காதலர்கள் இருவருமே திருமணமானவர்கள். இரண்டு வீட்டிலும் துணைவர்களிற்கு தெரியாமல் சுரங்க பாதையின் வாயிலை மறைத்து வைத்துள்ளனர்.

ஒரு நாள் கணவர் ஜோர்ஜ் வழக்கத்தை விட வேலையில் இருந்து முன்னதாக வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது நபரொரவரின் நடமாட்டத்தை வீட்டிற்குள் அவதானித்தார். படுக்கையறையின் கீழ் சோதனையிட்டார். யாருமில்லை. பின்னர் ஆல்பர்டோ ஒரு சோபாவின் பின்னால் மறைந்திருப்பதைக் கண்டார்.

மேலும், படுக்கையறைக்கு அருகில் துளையிருப்பதை அவதானித்தார். அவர் அதில் நுழைந்து சென்றபோது, ​​அது அவரை ஆல்பர்டோவின் வீடு வரை சென்றதும் தெரியவந்தது.

சுரங்கப்பாதையின் அளவு மற்றும் நீளம் உள்ளூர் ஊடகங்களால் தெரிவிக்கப்படவில்லை என்றாலும், நுழைவாயிலின் படங்கள் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டுள்ளன.

ஜோர்் சுரங்கப்பாதையில் ஆல்பர்ட்டோவன் வீட்டிற்கு சென்றார். அந்த நேரத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஆல்பர்டோவின் சொந்த மனைவியிடம் இந்த விவகாரத்தை வெளியிட வேண்டாம் என்று ஆல்பர்டோ அவரிடம் கெஞ்சியதாகக் கூறப்படுகிறது.

இதைப் பொருட்படுத்தாமல், ஆத்திரமடைந்த ஜோர்ஜ், ஆல்பர்டோவின் மனைவியைக் கண்டுபிடித்து அவரிடம் விடயத்தை சொன்னார். பின்னர் ஜோர்ஜ், ஆல்பர்டோ இரண்டு பேரும் சண்டை போட்டுக்கொண்டனர். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் பொலிஸை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்தது சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், மேலும் வன்முறைகளைத் தடுக்க ஆல்பர்டோவை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here