இன்று இந்த மோசடி குழு உங்களை குறிவைக்கலாம்: எச்சரிக்கை!

சமூக வலைத்தளங்கள் ஊடாகவோ அல்லது தொலைபேசி அழைப்புகள் வாயிலாகவோ பரப்பப்படும் போலி தகவல்களை நம்பி ஏமாற்றமடைவதை தவிர்த்துக்கொள்ளுங்கள் என காவல் துறை ஊடகப்பேச்சாளர் பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹண பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

போலி தகவல்கள் வாயிலாக மக்களை ஏமாற்றிய நைஜீரிய நாட்டை சேர்ந்த 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மேலும் சில நைஜீரியர்களால் இந்த சட்டவிரோத செயல்கள் இன்றைய தினம் முன்னெடுக்கப்படலாம் எனவும் காவல் துறை ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

புதுவருடத்தை முன்னிட்டு குறித்த நைஜீரிய பிரஜைகள் மக்களிடம் நிதி மோசடியில் ஈடுபடுவது கண்டறியப்பட்டுள்ளது.

கையடக்க தொலைபேசிக்கு அல்லது வட்ஸ்அப், உள்ளிட்ட இணையத்தள செயலிகளுக்கு பணப்பரிசினை வென்றுள்ளதாக குறுஞ்செய்திகளை அனுப்புகின்றனர்.

குறித்த பணப்பரிசினை பெற்றுக்கொள்வதற்கு ஒரு தொகை பணத்தை வைப்பிலிடுமாறு கோரிக்கை விடுக்கின்றனர். இதனை நம்பி மக்களும் பணத்தை வைப்பிலிடுகின்றனர். வைப்பிலிட்ட பணத்தை பெற்றுக்கொண்டவுடன் அவர்கள் தலைமறைவாகிவிடுகின்றனர்.

அறியப்படாத கணக்குகளுக்கு இதுபோன்ற பணம் செலுத்த வேண்டாம் அல்லது சரிபார்க்கப்படுவதற்கு முன்பு எந்த இணைப்பையும் திறக்க வேண்டாம் என்று பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.

“இந்த வகையான மோசடிகளில் ஈடுபட்டுள்ள உள்ளூர்வாசிகள் உள்ளனர். இந்த மோசடிகளில் நைஜீரியர்களைப் போன்ற வெளிநாட்டவர்களும் உள்ளனர்” என்று அவர் கூறினார்.

நைஜீரியர் ஒருவர் வைத்தியராக நடித்து இலங்கை சட்டத்தரணி பெண்ணை சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி ஏமாற்றி 30 இலட்சம் ரூமா மோசடி செய்த சம்பவம் அண்மையில் நடந்தது. அதை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையிலேயே நைஜீரிய திருடர் கூட்டம் சிக்கியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here