ராஜபக்சக்களின் ஆட்சியில் தமிழர்கள் இரண்டாம் தர குடிமக்களாக்கப்பட்டுள்ளனர்; 13வது திருத்தத்தை காப்பாற்ற தலையிடுங்கள்: மோடியை வலியுறுத்தும் தி.மு.க!

திமுக நாடாளுமன்றக் கட்சித் தலைவர் டி.ஆர். இலங்கையில் மாகாண சபை முறைகளை ஒழிக்கும் இலங்கையின் நடவடிக்கையை நிறுத்த பிரதமர் நரேந்திர மோடியின் தலையீட்டை கோரியுள்ளார் தி.மு.கவின் பொருளாளரும், நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு.

இலங்கை அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை, இலங்கை தமிழர்களின் சுய மரியாதையை அழிக்கும் நடவடிக்கையென குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அறிக்கையொன்றை அவர் வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் இந்த நடவடிக்கை இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவை பாதிக்கும் என்று பிரதமர் எச்சரிக்க வேண்டும். மாகாணசபைகளை ஒழிக்க இலங்கை அரசாங்கம் எடுக்கும் முயற்சி, தமிழர்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றும் முயற்சியின் ஒரு பகுதியாகும் என்று தெரிவித்துள்ளார்.

ராஜபக்ஷ சகோதரர்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, தமிழர்களின் உரிமைகள், சுய மரியாதை மற்றும் கௌரவத்தை இழந்துவிட்டார்கள் என்றும், இந்திய மத்திய பாஜக அரசு ஒரு ஊமை பார்வையாளராக இருந்து வருவது கவலைக்குரியது என்றும் தெரிவித்துள்ளார்.

“மாகாண சபைகளை ஒழிப்பது என்பது இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் இயற்றப்பட்ட 13 வது திருத்தத்திற்கு எதிரானது. இந்தியாவுடன் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் கேள்விக்கு உட்படுத்தப்படும்போது வெளியுறவு அமைச்சகமும் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் அமைதியாக இருப்பது அதிர்ச்சியளிக்கிறது” என்று அவர் கூறினார்.

13வது திருத்தத்தை ஒழிக்க இலங்கை முயன்றால், இந்தியவுடனான உறவு சீர்கெடும் என்பதை இலங்கைக்கு தெளிவாக கூற வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here