இலங்கை போக்குவரத்து சபையில் பழுதடைந்த நிலையில் சேவையில் ஈடுபட முடியாமலிருந்து 273 பேருந்துகள் பழுதுபார்க்கப்பட்டு, மீளவும் இ.போசவிடம் வழங்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் 107 டிப்போக்களில் முழுமையாக சேவையில்லாமல் இருந்த 273 பேருந்துகள் ரூ .115 மில்லியன் செலவில் பழுதுபார்க்கப்பட்டுள்ளன.
இந்த திட்டத்தை இலங்கை போக்குவரத்து சபை, லக்திவ பொறியியல் நிறுவனம் இலங்கை பொது போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் முழு ஆதரவோடு செயல்படுத்தி வருகின்றன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பேருந்துகளின் தரத்தை பார்வையிட்டார்.