தெமட்டகொடவில் உள்ள இலங்கை பெட்ரோலியம் கூட்டுத்தாபனத்தின் தலைமை அலுவலகம் மற்றும் முத்துராஜாவெல மசகு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டுள்ளன.
முத்துராஜாவெல மசகு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பணியாற்றிய ஊழியர் ஒருவர், பி.சி.ஆர் சோதனையின் முடிவுகள் வெளிவருவதற்கு முன்பே, தலைமை அலுவலகத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது. அவர் தலைமை அலுவலகத்தின் பல பிரிவுகளை பார்வையிட்டதாக தெரிவித்தனர்.
அந்த ஊழியர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட பின்னர் இரு நிறுவனங்களும் மூடப்பட்டன.