மட்டக்களப்பு மாவட்டத்திலும் சோளனில் படைப்புழு தாக்கம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை செய்கை செய்யப்பட்டுள்ள சோளன் பயிர்களில் சுமார் 738 கெக்டேயர் நிலப்பரப்பில் படைப்புழுத் தாக்கத்தின் பரவல் காணப்படுகின்றது.

அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் இம்முறை செய்கை செய்யப்பட்டுள்ள சோளன் பயிர்களில் பெரும்பாலான சோளன் படைப்புழுத் தாக்கத்தின் பரவல் காரணமாக முற்றுமுழுதாக அழிவடைந்த நிலையில் உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக மதுரங்கேணிக்குளம், குஞ்சன்குளம், கிரிமிச்சை உட்பட்ட பல பிரதேசங்களின் தற்போது சோளம் செய்கை பண்ணப்பட்டு வந்த நிலையில் சோளம் குடலைப்பருவமாக வரும் போதே படைப்புழுக்களின் தாக்கம் ஆரம்பித்து காணப்படுகின்றது.

குறித்த பிரதேச மக்களின் ஜீவனோபாய தொழிலில் ஒன்றாக விவசாய செய்கை முக்கிய பங்கு வகிக்கின்றது. அதிலும் சோளம் செய்கை மூலம் இவர்கள் தங்களது வாழ்நாள் உணவுத் தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்கு உதவியாக உள்ளது.

அத்தோடு சோளம் குலைகள் சிலவற்றினை படைப்புழுக்கள் அழித்து வெறும் சோளம் நெட்டிகள் மாத்திரம் சில சோளம் செய்கை தோட்டங்களில் காணப்படுகின்றது. இந்த வியடம் தொடர்பாக எந்தவித அதிகாரிகளும் வருகை தரவில்லை என் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கடந்த வருடம் முதல் ஆரம்பித்த படைப்புழுக்களின் தாக்கம் தொடர்ச்சியாக இம்முறையும் ஏற்பட்டுள்ளது. கடந்த முறை அனுபவித்த நஷ்டத்தினை இம்முறை பூர்த்தி செய்யலாம் என்ற எண்ணத்தில் மக்கள் சோளம் செய்கையில் ஈடுபட்ட நிலையில் மீண்டும் படைப்புழுக்களின் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

எனவே தொடர்ச்சியாக படைப்புழுக்களின் தாக்கம் ஏற்பட்டு வரும் பட்சத்தில் பாதிக்கப்படும் எங்களுக்கு உரிய நஷ்ட இட்டினை வழங்குமாறு கோருவதுடன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தங்களது பகுதிகளுக்கு இதுவரையும் வருகை தரவில்லை என்று மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here