பதற வைக்கும் பாம்பு மசாஜ்!

ஓயில் மசாஜ், பவுடர் மசாஜ் எனப் பல வகையான மசாஜ்களை கேள்விப் பட்டிருப்பீர்கள். ஆனால் எகிப்து நாட்டில் தற்போது பாம்பு மசாஜ் ஒரு புதுவகையான மசாஜ் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கிறது.

பாம்பென்றால் படையும் நடுங்கும்தான். நீங்கள் கொஞ்சம் கண்ணை மூடிக்கொண்டு, பாம்புக்கு வழிவிட்டு, இந்த மசாஜ் செய்து கொண்டால் உடலில் உள்ள வலியெல்லாம் பறந்துவிடும் என எகிப்தியர்கள் கூறுகின்றனர்.

எகிப்தின் கெய்ரோ நகரில் உள்ள ஒரு மசாஜ் சென்டரில் தான் புதுவரவாக பாம்பு மசாஜ் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கிறது. இந்த மசாஜிற்காக டஜன் கணக்கில் பாம்புகளை அள்ளி உடம்பு மேல் வைக்கின்றனர்.

இந்த பாம்பு கடித்து விட்டால் என்ன செய்வது என்று நமக்குள் பயம் வரலாம். ஆனால் அங்கு பயன்டுத்தப்படும் 28 வகையான பாம்புகளும் விஷமற்றவை தான் என கூலாக பதில் அளிக்கும் மசாஜ் சென்டர் ஊழியர்கள், பயமில்லாமல் அனைவரும் மசாஜ் செய்து கொள்ளலாம் எனக் கூறுகின்றனர்.

இந்த மசாஜில் மலைப் பாம்புகள் உள்ளிட்ட விதவிதமான பாம்புகள் இருக்கிறன. அதோடு உள்ளம் கால் முதல் உச்சம் தலைவரை பாம்புகளை உடலில் ஊர விடுவார்களாம்.

சுமார் 30 நிமிட பாம்பு ஊரலில் உடலில் இருக்கும் ஒட்டுமொத்த வலியும் காணாமல் போய்விடுவதாக பயன்படுத்தியவர்கள் கூறியுள்ளனர்.

பாம்பு மசாஜ் என்றவுடன் விலை அதிகமாக இருக்கும் என எண்ண வேண்டாம். இந்த மசாஜூக்கு இலங்கை மதிப்பில் 1200 ரூபா என விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here