199ஆக உயர்ந்தது கொரோனா மரணம்!

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 4 மரணங்கள் நேற்று பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன அறிவித்துள்ளார்.

இதன்மூலம் மொத்த கொரோனா மரணங்கள் 199 ஆக உயர்ந்துள்ளது.

இவ்வாறு அறிவிக்கப்பட்டவர்களில் ஒருவர் நேற்றும் (30) ஏனைய மூவரும் நேற்றுமுன்தினமும் (29) மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

196வது மரணம்
மட்டக்களப்பு பிரதேசத்தைச் சேர்ந்த, 72 வயதான ஆண் ஒருவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (30) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா மற்றும் மெனினஜைடிஸ் நோய் நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.

197வது மரணம்
கொழும்பு 10 (மருதானை/ மாளிகாவத்தை) பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதான பெண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று முன்தினம் (29) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், உக்கிர ஈரல் தொற்று மற்றம் கொவிட்-19 தொற்றுடன் ஏற்பட்ட குருதி விஷமடைவினால் ஏற்பட்ட அதிர்ச்சி நிலை, என அறிவிக்கப்பட்டுள்ளது.

198வது மரணம்
கொலன்னாவை பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட நிலையில், ஹோமாகாம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று முன்தினம் (29) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்றுடன் ஏற்பட்ட உக்கிர சிறுநீரக தொற்று மற்றும் அதிக இரத்த அழுத்தத்துடன் ஏற்பட்ட இருதய நோய் நிலை, என அறிவிக்கப்பட்டுள்ளது.

199வது மரணம்
கொழும்பு 15 (மட்டக்குளி/முகத்துவாரம்) பிரதேசத்தைச் சேர்ந்த 66 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று முன்தினம் (29) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்று மற்றும் உக்கிரமான நீரிழிவு நிலை, என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here