யாழ் மாநகரசபையில் கூட்டமைப்பின் காலை வாரியவர் வீட்டுக்கு நள்ளிரவில் சென்ற சுமந்திரன்!

யாழ் மாநகரசபை முதல்வர் தெரிவில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தோல்வியடைய பிரதான காரணமாக அமைந்த உறுப்பினர் அருள்குமரனின் வீட்டிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இன்று பின்னிரவில் சென்றிருந்தார்.

பின்னிரவு 11.02 அளவிலேயே அந்த வீட்டிலிருந்து அவர் வெளியேறி சென்றார்.

யாழ் மாநகரசபை முதல்வர் தெரிவில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் இமானுவேல் ஆனல்ட் 1 வாக்கினால் தோல்வியடைந்திருந்தார். இதில், எம்.ஏ.சுமந்திரன் அணியை சேர்ந்த உறுப்பினர் அருள்குமரன் வாக்களிக்கவில்லை.

ஆனல்ட் போட்டியிட கூடாதென்பதில் சுமந்திரன் ஒற்றைக்காலில் நின்ற நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப் ஆனல்ட்டை வேட்பாளராக நிறுத்தியிருந்தது.

கூட்டமைப்பின் ஒரு வேட்பாளர் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் விட்டது, மணிவண்ணன் தரப்பையும் ஈ.பி.டி.பியையும் கோர்த்து விட்டது என, கூட்டமைப்பிற்கு எதிரான பெரும் நடவடிக்கைக்கான திரைக்கதையை யார் எழுதியது என்பது தொடர்பில் அரசல் புரசலான தகவல்கள் ஏற்கனவே வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில், ஈ.பி.டி.பிக்கு சார்பான நிலை உருவாக காரணமாக அமைந்த- ஒரு உறுப்பினர் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் இருந்தமை- கூட்டமைப்பின் மாநகரசபை உறுப்பினர் அருள்குமரனின், நாவலர் வீதியிலுள்ள வீட்டுக்கு எம்.ஏ.சுமந்திரன் நள்ளிரவில் சென்றுள்ளார்.

இந்த நிலையில், யாழ் மாநகரசபை முதல்வர் தெரிவில் ஏற்பட்ட தோல்விக்கு மாவை சேனாதிராசாவே பொறுப்பேற்க வேண்டுமென எம்.ஏ.சுமந்திரன் கடிதம் அனுப்பிய சுவாரஸ்ய சம்பவமும் நடந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here