ஊசி போட மறக்காதீர்கள்: வித்தியாச யோசனை!

ஐரோப்­பா­வில் கொவிட்-19 தடுப்­பூசி மருந்­து­கள் போட்­டுக்­ கொள்­வதை மக்­க­ளி­டம் நினை­வு­ப­டுத்­தும் வித்­தி­யா­ச­மான முயற்­சியை அந்­நாட்டு விமானி ஒரு­வர் முன்னெடுத்துள்ளார்.

ஊசி­யைப் போட பயன்படும் ‘சிரிஞ்ச்’  வடி­வி­லான 200 கிலோ மீட்­டர் தூர பய­ணப் பாதை­யில் அவர் விமா­னத்தை இயக்­கி­யுள்­ளார்.

சேமி கிரே­மர் எனும் அந்த 20 வயது விமானி, தெற்கு ஜெர்­ம­னி­யில் ‘லேக் கான்ஸ்­டன்ஸ்’ எனும் பகு­திக்கு அருகே விமா­னத்தை இயக்­கு­வ­தற்கு முன்பு, விமா­னத்­தில் தாம் செல்­ல­வி­ருக்­கும் பாதையை ‘ஜிபி­எஸ்’ சாத­னத்­தில் திட்­ட­மிட்­டார்.

‘சிரிஞ்ச்’ வடி­வி­லான அந்­தப் பய­ணப் பாதை ‘ஃபிளைட்­ரே­டார்24’ எனும் இணையத்தில் காண்­பிக்­கப்­பட்­டது.

“தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ள பல­ரும் இன்­னும் விரும்­பா­தது எனது கவ­னத்­திற்கு வந்தது. அவர்­க­ளது சிந்­த­னையை மாற்றி தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள ஊக்­கு­விக்­கவே நான் இந்த நட­வ­டிக்­கை­யில் இறங்­கி­னேன்,” என்று ரொய்ட்­டர்ஸ் நிறு­வ­னத்­தி­டம் கிரேமர்  கூறி­னார்.

எனி­னும் தமது பய­ணம், மக்­கள் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வ­தற்­கான உத்­த­ரவு அல்ல என்­பதை அவர் தெளி­வு­ப­டுத்­தி­னார்.

கொவிட்-19 தடுப்­பூ­சித் திட்­டத்தை ஜெர்­மனி இரண்டு தினங்களின் முன்னர் தொடங்கியது. இவ்­வாண்டு இறு­திக்­குள் 1.3 மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மான தடுப்­பூசி மருந்­து­க­ளைச் சுகா­தார அதி­கா­ரி­க­ளி­டம் விநி­யோ­கிக்க அந்­நாட்டு அர­சாங்­கம் திட்டமிட்டுள்ளது. ஜன­வ­ரி­யில் இருந்து விநி­யோ­கிக்­கப்­படும் தடுப்­பூ­சி­களின் எண்ணிக்கை வாரத்­திற்கு 700,000ஆக இருக்­கும் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில், ஜெர்­ம­னி­யில் கொவிட்-19 தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்ட முதல் நப­ராக 101 வயது பெண்மணி ஒரு­வர் விளங்­கு­கி­றார். வடக்கு ஜெர்­ம­னி­யில் உள்ள முதி­யோர் இல்­லம் ஒன்­றில் அவர் வசிக்­கி­றார்.

முதி­யோர் இல்­லங்­களில் வசிப்­போ­ருக்கும் அங்கு பணி­பு­ரி­ப­வர்­களுக்­கும் தடுப்­பூசி போட ஜெர்மானிய அரசாங்கம் முன்­னு­ரிமை அளிக்­கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here