வவுனியா நகரசபை: ஐ.தே.க, சு.க ஆதரவுடன் ஈ.பி.ஆர்.எல்.எவ் கைப்பற்றியது!

0

வவுனியா நகரசபை தவிசாளராக  விடுதலைக்கூட்டணியின் கௌதமன் தெரிவாகியுள்ளார். அவருக்கு 11 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட தமிழரசுக்கட்சியின் சேனாதிராசா 9 வாக்குகளையும் பெற்றார்.

வவுனியா நகரசபைக்கான தவிசாளர் தேர்வு இன்று காலை 10.00 மணிக்கு வடக்கு உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் ரஞ்சன் தலைமையில் நடந்தது. இதன்போது, பகிரங்க வாக்கெடுப்பா, இரகசிய வாக்கெடுப்பா என்பதை தீர்மானிக்க நடந்த வாக்கெடுப்பில், பகிரங்க, இரகசிய வாக்கெடுப்பிற்கு அதிக வாக்குகள் கிடைத்ததன் அடிப்படையில் வாக்கெடுப்பு நடந்தது.

இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சேனாதிராசாவிற்கு ஆதரவாக 9 வாக்குகளும், தமிழர் விடுதலைக்கூட்டணியின் கௌதமனிற்கு 11 ஆதரவாக வாக்குகளும் கிடைத்தன. இதனடிப்படையில் கௌதமன் தவிசாளராக தேர்வானார்.

தமிழர் விடுதலைக்கூட்டணியின் கௌதமனிற்கு ஐக்கிய தேசியக்கட்சியின் 3 உறுப்பினர்களும், சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் ஆதரவளித்தனர். தமிழரசுக்கட்சியின் சேனாதிராசாவிற்கு ஐ.தே.கவின் ஒரு உறுப்பினர் ஆதரவளித்தார்.