பறக்கிறதுக்கு ஆசைப்பட்டு இருக்கிறதையும் இழந்த ரெலோ!

இருக்கிறதை விட்டு, பறப்பதற்கு ஆசைப்படுறது ரெலோ என நேற்று சுட்டிக்காட்டியிருந்தோம். இன்று அதுதான் நடந்துள்ளது. இப்பொழுது கோப்பாய் பிரதேசசபையும் இல்லாமல், நல்லூர் பிரதேசசபையையும் கோட்டை விட்டுள்ளது ரெலோ.

நல்லூர் பிரதேசசபை தவிசாளர் வேட்பாளராக தமது தரப்பில் மதுசுதனை நியமிக்க வேண்டுமென ரெலோவின் தேசிய அமைப்பாளர் குருசாமி சுரேன் ஒற்றைக்காலில் நின்றார்.

தனது தேர்தல் பிரச்சார பணியாற்றியவர் என்ற அடிப்படையில் மட்டுமே அவர் மதுசுதனை தெரிவு செய்தார்.

மதுசுதனை நியமித்தால் ஆதரிக்க மாட்டோம் என நல்லூரில் 2 உறுப்பினர்களை கொண்ட மாம்பழம் சுயேட்சைக்குழு கூறியது. தமிழ் அரசு கட்சி உறுப்பினர்களும் எதிர்த்தனர்.

தன்னை நிர்வாகம் செய்ய விடாமல் மதுசுதன் குழப்பம் செய்தவர் என்ற அடிப்படையில் முன்னாள் தவிசாளர் தியாகமூர்த்தி தீராத அதிருப்தியில் இருந்தார். அவர் இன்று சபை அமர்வில் கலந்து கொள்ளவில்லை.

ரெலோ தரப்பில் பொருத்தமான வேட்பாளரை நிறுத்தியிருந்தால் அல்லது தமிழ் அரசு கட்சியின் தவிசாளர் களமிறக்கப்பட்டால் தமிழ் தேசிய கூட்டமைப்பு நிச்சயம் வெற்றிபெற்றிருக்கும். பொருத்தமான வேட்பாளரை களமிறக்கினால் மாம்பழம் 2, உதயசூரியன் 1 உறுப்பினர்கள் நிச்சயம் கூட்டமைப்பை ஆதரித்திருப்பார்கள். கூட்டமைப்பை தனது தலையில் மண் அள்ளி போட்டுள்ளது.

நல்லூரை பெறுவதற்காக கோப்பாயை விட்டுத்தருவதாக ரெலோ தரப்பினால் கூறப்பட்டது.

இப்பொழுது நல்லூரை ரெலோ தோற்று விட்டது.

அடுத்த வாரத்திற்குள் கோப்பாய் தவிசாளர் பதவியையும் துறந்து தமிழ் அரசு கட்சியிடம் வழங்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here