இலங்கையில் சீனாவின் நடவடிக்கையை பாராட்டிய எரிக் சொல்கெய்ம்!

இலங்கைக்கான முன்னாள் நோர்வே சமாதானத்தூதர் எரிக் சொல்ஹெய்ம், இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட அதிவேக நெடுஞ்சாலை கட்டுமானம் குறித்து தனது ருவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் புதிதாக கட்டப்பட்ட பகுதியின் படங்களை பகிர்ந்து, அந்த திட்டத்தை மேற்கொள்ளும் சீன நிறுவனத்திற்கும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு பகுதி, யானைகளின் நடமாட்ட பகுதியை ஊடறுத்து செல்கிறது.

இந்த திட்டத்திற்கான ஒப்பந்தத்தை பெற்ற சீன நிறுவனம், அனைத்தையும் தரைப்பாதையாகவே அமைக்க வரைவு சமர்ப்பித்திருந்தது.

எனினும், பின்னர்  சுற்றுச்சூழல் பிரச்சினையை உணர்ந்த பின்னர் வீதி அபிவிருத்தி அதிகாரசபையுடன் கலந்துரையாடி, திட்டத்தில் மாற்றம் செய்தது. அதன்படி, யானைகள் கடக்கும் பகுதியில், மேம்பாலமாக வீதி அமைக்கப்பட்டது. யானைகளின் இயல்பான நடமாட்டத்திற்கு இடையூறு இல்லாமல் இது செயற்படுத்தப்பட்டுள்ளது.

இதையே எரிக் சொல்கெய்ம் பாராட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here