ஆளும், எதிரணியினர் ஆடல், பாடல்!

ஆளும் மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த எம்.பிக்கள் சிலர், பிரியாவிடை விருந்துபசாரத்தில் பாடல்பாடிய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

அமைச்சர்களான விமல் வீரவன்ச, தயாசிறி ஜய​சேகர மற்றும் எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்ணான்டோ, மனுஷ நாணயக்கார ஆகியோர் ஒன்றாக இணைந்து பாடல் பாடுகின்றனர்.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைவராகவும் சுங்க திணைக்களத்தின் பணிப்பாளராகவும் மற்றும் தொலைத்தொடர்புகள், விளையாட்டு, தொழிற்றுறை அமைச்சுக்களின் முன்னாள் செயலாளராகவும் கடமையாற்றிய சூலானந்த பெரேரா, தனது அரசாங்க சேவை நிறைவு பெறுவதற்கு 2 வருடங்களுக்கு முன்னதானாகவே தனது கடமைகளை இராஜினாமா செய்துள்ளார்.

28 ஆம் திகதி இரவு தலவதகுடவில் உள்ள மோனார்க் ஹோட்டலில் நடந்த பிரியாவிடை விருந்துபாசரத்திலேயே இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here