கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தலாமென கருதப்படும் 37 உள்ளூர் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவ பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
ஒரு நிகழ்வில் பேசிய அமைச்சர், கொரோனாவை குணப்படுத்துமென முன்வைக்கப்பட்டுள்ள பாணி மருந்துகளின் செயற்திறனை தற்போது பரிசோதித்து வருவதாக கூறினார்.
சிகிச்சை முறைகளை பரிசோதிக்க நிபுணர்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.