நிலத்தடி நீர் மட்டம் ஆழமாக காணப்படும் இரண்டு இடங்களை வல்லுனர்கள் கண்டறிந்துள்ளனர் என்று நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நிபுணர்கள் முன்வைத்த அறிக்கையை மேற்கோள் காட்டி, இந்த இரண்டு இடங்களிலும் கூட நிலத்தடி நீர் மட்டம் சுமார் 30 அடி ஆழத்தில் உள்ளது என்று கூறியுள்ளார்.
மன்னாரில் உள்ள மரிச்சுக்கட்டி, கிழக்கில் இறக்காமம் பகுதிகளே நிலத்தடி நீர்மட்டம் ஆழமான பகுதியென குறிப்பிட்டள்ளார்.
கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை புதைக்க பொருத்தமான இடத்தை தெரிவு செய்வதற்காக, நிலத்தடி நீர்மட்டம் குறைந்த பகுதிகளை அடையாளப்படுத்தும்படி அமைச்சர் வாசுதேவவிடம், பிரதமர் அண்மையில் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.