முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்யப்படுவதற்கு எதிராக யாழில் போராட்டம்!

கொரோனாவினால் உயிரிழக்கும் முஸ்லிம் மக்களின் உடல்களை எரிப்பதற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

யாழ் மத்திய பேருந்து நிலையத்தின் முன்பாக இன்று காலை 9.30 மணியளவில் போராட்டம் இடம்பெற்றது.

யாழிலுள்ள முஸ்லிம் மக்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த போராட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாநகரசபை பதில் முதல்வர் து.ஈசன், முன்னாள் முதல்வர் இ.ஆனல்ட், வலிகிழக்கு பிரதேசசபை தவிசாளர் தி.நிரோஷ், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள். ச.சுகிர்தன், சபா.குகதாஸ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here