காங்கேசன்துறை கடற்கரையில் ஒதுங்கிய 350 KG கஞ்சா பொதிகள்!

காங்கேசன்துறை கடற்கரையில் ஒதுங்கிய சுமார் 350 கிலோ கிராம் எடையுடைய கஞ்சா போதைப்பொருள் பொதிகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரே குறித்த கஞ்சா பொதிகளை இன்று நண்பகல் மீட்டுள்ளனர்.

எனினும் அதனைக் கடத்த முயற்சித்தவர்கள் தொடர்பில் இதுவரை தகவல்கள் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

கஞ்சா போதைப்பொருள் பொதிகள் நீதிமன்றில் பாரப்படுத்தப்படுவதற்காக காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here