மட்டக்களப்பு இளைஞன் அவுஸ்திரேலியாவில் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு!

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா- நியூ சவுத் வேல்ஸ் மாநில எல்லையிலுள்ள ரொபின்வலே (Robinvale) பகுதியில் தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் முர்ரே (Murray) ஆற்றில் மூழ்கிப் பலியாகியுள்ளார்.

மட்டக்களப்பு பழுகாமத்தைச் சேர்ந்த சோ.திசாந்தன் (28) என்ற இளைஞரே இவ்வாறு பலியானவர்.

புகலிடம்கோரி அவுஸ்திரேலியா வந்த திசாந்தன், குயின்ஸ்லாந்து, சிட்னி போன்ற இடங்களில் வசித்த பின்னர் அண்மையில் விக்டோரியாவில் குடியேறியதாக குறிப்பிடப்படுகிறது.

கிறிஸ்மஸ் தினத்தன்று தனது நண்பர்களுடன் முர்ரே ஆற்றுக்குச் சென்றிருந்த இவர் அங்கு நீச்சலில் ஈடுபட்டபோது காணாமல் போனதாகவும்,  தேடுதல் நடவடிக்கையின் பின்னர் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இவரது உடல் கண்டெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இவரது உடல் மரணவிசாரணை அதிகாரியின் விசாரணைகளுக்கென ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ரொபின்வலே பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here