மட்டக்களப்பில் முதலாவது கொரோனா மரணம்

கொரோனா தொற்றினால் காத்தான்குடியைச் சேர்ந்த 65 வயதுடைய ஒருவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று (26) மாலை உயிரிழந்தார்.

சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்த இவர், இரத்தம் மாற்றும் சிகிச்சை மேற்கொண்டுவந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இதுவரை கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றினால் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதுடன், 991 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here