புதுக்குடியிருப்பு நகரத்தில் மயான அமைதி நிலவி வருகிறது.
எழுமாற்றான சோதனையில் நேற்று ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, நகரம் இன்று வெறிச்சோடிப் போயுள்ளது. மக்கள் நகரத்திற்கு வரவில்லை. பெரும்பாலும் வீடுகளிற்குள்ளேயே முடங்கியுள்ளனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமையாதால் சந்தை வழக்கம் போல இயங்கவில்லை. இன்று சந்தைக்குள் இயங்கிய கடைகள் சுகாதார அதிகாரிகளினால் மூடப்பட்டது. சந்தை தொற்று நீக்கம் செய்யப்பட்டது.
அத்துடன், சந்தை வியாபாரிகள் மற்றும் தொற்றாளருடன் நெருங்கி பழகியவர்களிற்கு பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
இதேவேளை, புதுக்குடியிருப்பு பகுதியில் இரண்டு ஐயப்பன் ஆலயங்கள் உள்ளன. தொற்றாளர், கைவேலி ஆலயத்தில் நேற்று மாலை கழற்றினார். அவருடன் பாத பூஜையில் ஈடுபட்டு, நெருங்கிப் பழக்கிய இன்னொரு ஐயப்ப பக்தர், மற்ற ஆலயத்திற்கும் சென்று அங்குள்ளவர்களிற்கு விபூதி பூசியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியிலுள்ள ஐயப்ப பக்கதர்கள் தேடித்தேடி தனிமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள்.