புதிய அரசியலமைப்பு உருவாக்கம் முடிவடையும் வரை மாகாண சபை தேர்தல் நடத்தப்படக்கூடாது என்று பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
அஹங்கம பகுதியில் செய்தியாளர்கள் மத்தியில் இதனை தெரிவித்தார்.
மாகாண சபைகள் தொடர்பான புதிய சட்டங்கள் புதிய அரசியலமைப்பில் சேர்க்கப்படவுள்ளன. பல சந்தர்ப்பங்களில் மாகாண சபைகள் தொடர்பான எனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளேன்.
ஒரு நாடு, ஒரு சட்டக் கருத்தை அமல்படுத்துவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். இதனால், ஒன்பது வெவ்வேறு மாகாணங்களில் வெவ்வேறு விதிமுறைகளை செயல்படுத்த முடியாது .
எனவே மாகாண சபை முறையை அரசாங்கம் முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும். நிலவும் முரண்பாடுகளின் காரணமாக, புதிய அரசியலமைப்பை உருவாக்கும் வரை மாகாண சபை தேர்தல் ஒத்திவைக்கப்பட வேண்டும்“ என்றார்.