அவுஸ்திரேலியாவில் உள்ளாடையுடன் சென்ற யுவதியை வெளியேற்றிய உணவகம் மன்னிப்பு கோரியது!

அஸ்திரேலியாவில், காதலனுடன் உணவமொன்றிற்கு சென்ற சுற்றுலா பயணியான யுவதியொருவர் வெளியேற்றப்பட்டுள்ளார். அவர் உள்ளாடையுடன் வந்துள்ளதாக கூறியே வெளியேற்றப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் North Bondi பகுதியில் இருக்கும் North Bondi Fish உணவகத்திற்கு இத்தாலிய சுற்றுலா பெண் பயணியான மார்டினா கொராடி (Martina Corradi) தன்னுடைய காதலனுடன் சென்ற நிலையில், பலர் முன் வெளியேற்றப்பட்டதாக வேதனையுடன் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில், புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து அந்த உணவகத்தின் மேலாளர், ஆங்கில ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவித்துள்ளார். சம்பவம் குறித்து மார்டினாவிடம் மன்னிப்பு கோரியதாகவும், அவருக்கு இலவச உணவை வழங்க தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

“நாங்கள் இந்த் சம்பவம் குறித்து மறுபரிசீலனை செய்யவுள்ளோம். மார்டினாவையும் அவருடன் வந்த நபரையும் உணவகத்தை விட்டு வெளியேற கூறியது, எங்களுடைய பிழை என்பதை ஒத்துக் கொள்கிறோம்.

நாங்கள் மார்டினாவுடன் தொடர்பு கொண்டு, இது போன்ற தவறுக்கு மன்னிப்பு கோரியுள்ளோம். அவரையும், அவருடன் வந்தவரையும் மதிய உணவிற்காக அல்லது இரவு உணவிற்காக அழைத்தோம்.

நாங்கள் ஒரு சாதாரண ஆடைக் குறியீட்டை ஆதரிக்கிறோம். இருப்பினும் மார்ட்டினாவை வெளியேறச் செல்லக் கூடாது.

இதன் விளைவாக, எங்கள் ஊழியர்கள் மற்றும் நிர்வாகத்தினர் அனைவருக்கும் ஆடைக் குறியீடு உள்ளிட்ட எங்கள் நெறிமுறைகளில் மீண்டும் பயிற்சி அளிக்க வேண்டிய அவசியத்தில் உள்ளோம். எங்கள் உணவகத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் உட்பட அனைவரையும் வரவேற்பதில் பெருமிதம் கொள்கிறோம்“ என்று கூறியுள்ளார்.

இத்தாலியை சேர்ந்த  மார்ட்டினா, அந்த உணவகத்திற்கு செல்லும்போது அணிந்திருந்த ஆடையுடன் கூடிய புகைப்படத்தை பேஸ்புக்கில் பகிர்ந்து, “நான் இந்த ஆடையுடன் உணவகத்திற்கு சென்றதால், சங்கடப்படுத்தப்பட்டேன். புண்படுத்தப்பட்டதாக உணர்ந்தேன்“ என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here