கள்ளப்பாட்டில உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற ஆழிப்பேரலை நினைவேந்தல்

முல்லைத்தீவு – கள்ளப்பாடு, உதயம் விளையாட்டுக்கழக மைதானத்தில், விசேடமாக ஒழுங்குபடுத்தப்பட்ட இடத்தில், ஆழிப்பேரலையினால் காவுகொள்ளப்பட்ட உறவுகளின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு உணர்வழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது.

குறித் அஞ்சலி நிகழ்வில் ஆழிப்பேரலையின் போது மனைவி உட்பட ஒன்பது உறவுகளை இழந்த கள்ளப்பாடு தெற்குகைச் சேர்ந்த வேலுப்பிள்ளை பரமேந்திரம் அவர்களால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து விசேடமாக அமைக்கப்பட்ட கல்லறை மாதிரிக்கு ஆழிப்பேரலையின்போது உறவுகளை இழந்தவர்கள் தமது உறவுகளை நினைந்து, பூத்தூவி, தீபமேற்றி தமது அஞ்சலிகளை மேற்கொண்டனர்.

அதேவேளை குறித்த அஞ்சலிநிகழ்வானது தற்கால கொரோனாத் தொற்று சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி இடம்பெற்றிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here