இன்று மேலுமொரு கொரோனா மரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 187 ஆக அதிகரித்துள்ளது.
கொழும்பு 15 மோதரை பகுதியைச் சேர்ந்த 67 வயது ஆண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொரோனா தொற்றினால் ஏற்பட்ட நிமோனியா காரணமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.