புதுக்குடியிருப்பில் இன்று கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவரின் நடமாட்டம் பற்றிய புதிய புதிய தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது.
அவர் ஐயப்ப பக்தர். ஐயப்பன் விரதம் இருந்தார். இன்றுதான் புதுக்குடியிருப்பு கைவேலியிலுள்ள பாரதி சாமி ஐயப்பன் ஆலயத்திற்கு சென்று மாலை கழற்றியுள்ளார். இன்று அங்கு மண்டல பூசை நடந்தது. அங்கு பெருமளவு ஐயப்ப பக்தர்கள் ஒன்றுகூடியுள்ளனர். பலர் அங்கு ஒன்றுகூடியதாக, ஆலயத்திற்கு வழிபாட்டிற்கு சென்ற ஒருவர் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.
ஆலய அன்னதானத்தில் சமையலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் அவருடன் தொடர்பிலிருந்த ஐயப்ப பக்தர்களும் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்படுகிறார்கள்.
அவர் இன்று மாலை வரை ஆலயம், சந்தை, பொதுமக்கள் கூடும் இடங்கள் என பல இடங்களிற்கும் சென்றுள்ளார்.
முன்னைய செய்தியில் அவர் இன்று மாலை சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டதாக தமிழ் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தோம். எனினும், அதில் திருத்தம் உள்ளது. அவர் இதுவரை வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்படவில்லை.
தற்போது, அவரது வீட்டிற்கு இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.