மன்னார் மாவட்ட செயலகத்தில் அஞ்சலி!

ஆழிப்பேரலையினால் காவு கொள்ளப்பட்ட உறவுகளின் 16 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வான தேசிய பாதுகாப்பு தின நினைவேந்தல் நிகழ்வு மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று சனிக்கிழமை (26) காலை நினைவு கூறப்பட்டது.
மன்னார் மாவட்ட அனார்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று காலை குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம் பெற்றது.
இதன் போது சர்வமத தலைவர்கள், திணைக்காள அதிகாரிகள்,மீனவஅமைப்புக்களின் பிரதி நிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது உயிர் நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் காலை 9.25 முதல் 9.25 வரையான நேர பகுதியில் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூர்ந்து தீபம் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here