சுனாமி அனர்த்தத்தில் மரணித்தவர்களை நினைவுகூர்ந்து வவுனியா கந்தசாமி கோவிலில் அஞ்சலி பூசை வழிபாடுகள் இடம்பெற்றது.
வவுனியா அந்தணர் ஒன்றியம், கந்தசாமி கோவில் நிர்வாகசபை மற்றும் தமிழ் விருட்சம் என்பன இணைந்து ஏற்பாடு செய்த அஞ்சலி நிகழ்வு அந்தணர் ஒன்றியத்தின் செயலாளர் பிரபாகரகுருக்கள் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது வவுனியா அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன, பிரதி பொலிஸ்மா அதிபர் லால் செனவிரத்ன, வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மானமடுவ, தமிழ் விருட்சத்தின் தலைவர் சந்திரகுமார் கண்ணன், தமிழருவி சிவகுமாரன் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.