வானிலை தரவுகளை சேகரிக்க சோதனை முயற்சி!

வளிமண்டலத்தின் பல்வேறு கூறுகள் குறித்த தரவுகளை சேகரிக்கவும், வானிலை தரவுகளைப் பெறவும் நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக சோதனை பலூன் ஒன்று பறக்கவிடப்பட்டுள்ளது.

18 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் ஒன்று சேர்ந்து தம்புள்ள உள்ள டி.எஸ்.சேனநாயக்க கல்லூரியில் இருந்து சோதனை பலூனைத் பறக்கவிட்டனர்.

இது ஒரு ரப்பர் பலூன். அமெரிக்காவிலிருந்து பெறப்பட்ட  மின்னணு உபகரணங்கள் மற்றும் தரவு சேமிப்பு பெட்டி என்பவற்றுடன் இணைக்கப்பட்டது.

இந்த தொழில்நுட்பம் வெற்றிகரமாக அமைந்தால், எதிர்காலத்தில் பல மாற்றங்களை அறிமுகப்படுத்தலாம் என்று மாணவர்கள் கருதுகின்றனர். தற்போது 1950 களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தின் மூலமே மேற்படி தரவுகள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

தரவு சேமிப்பு பெட்டி தரையில் தரையிறங்கும் போது வளிமண்டலத்தில் பலூன் 35-40 கி.மீ தூரத்தில் வெடித்து, பரசூட் உதவியுடன் தரவுப்பெட்டி தரையிறங்கும்.

இந்த சோதனை வெற்றியடைந்தால், மேல் வளிமண்டலத்தில் உள்ள பல்வேறு கூறுகளின் அளவைக் கண்டறிந்து, வானிலை தரவுகளை வழங்கலாம் மற்றும் காடழிப்பு மற்றும் வன அடர்த்தி யானைகளின் தரவு உட்பட பலவற்றை பெறலாமென மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here