உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் அஞ்சலி!

சுனாமி ஆழிப் பேரலையினால் காவுகொள்ளப்பட்டோரின் நினைவேந்தல் யாழ்
வடமராட்சி கிழக்கு, உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

வடமராட்சி கிழக்குப் பகுதியில் 1000 இற்கும் அதகமானவர்கள் ஆழிப்பேரலையில் உயிரிழந்தனர். உடுத்துறையில் 1001ன் உடல்கள் புதைக்கப்பட்டு நினைவாலயம் அமைக்கப்பட்டுள்ளது.

இன்று நூற்றுக்கணக்கான உறவுகள் சுகாதார முறைப்படி கூடி அஞ்சலி செலுத்தினர்.
இதில் பிரதான நினைவுத்தூபிக்கு மலர்மாலையை அணிவித்து சுடரினை பா.உ
சிவஞானம் சிறிதரன் ஏற்றி வைக்க, பா.உ கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஈகைச்சுடரினை ஏற்றி வைத்தார்.

தொடர்ந்து உறவினர்கள் தமது உயிர் தீத்த உளவுகளுக்கான சுடரை ஏற்றி கண்ணீர்
மல்க கதறி அழுது அஞ்சலித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here