மொபைல் போனே கதியென இருப்பதா? -பெற்றோருக்கு எதிராக கிளர்ந்தெழுந்த குழந்தைகள்

ஜெர்மனியில் மொபைல் போனே கதி என இருக்கும் பெற்றோருக்கு எதிராக சொந்த குழந்தைகளே திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பரபரப்பான வாழ்வியல் சூழலில் குழந்தைகளை கவனிக்க நேரமில்லாமல் போகிறது. இதனால் உலகம் முழுவதுமே குழந்தைகள் பெரிய அளவில் மன அழுத்தத்துக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக மொபைல் போன் வருகைக்கு பிறகு வீட்டில் கூட ஒருவருக்கொருவர் பேசுவது குறைந்து வருகிறது. மொபைல் போன்களை பயன்படுத்துவதிலேயே பெற்றோரின் நேரம் முழுவதும் செலவாகிறது.

இதனால் தனித்துவிடப்பட்ட குழந்தைகள் ஜெர்மனியில் சொந்த பெற்றோருக்கு எதிராக கொதித்தெழுந்துள்ளனர். ஹம்பர்க் என்ற நகரில் சின்னஞ்சிறிய குழந்தைகள் தங்களது பெற்றோர்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பெற்றோர்களே மொபைல் போன் பயன்படுத்துவதை நிறுத்துங்கள் என்ற முழுக்கத்துடனும், பதாகைகளை ஏந்தியும் அவர்கள் நடத்தி வரும் போராட்டம் ஜெர்மனி முழுவதையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

பெற்றோரின் மொபைல் மோகத்தால் தனித்து விடப்பட்ட எமில் என்ற சிறுவன் இந்த போராட்டத்துக்கு தலைமை ஏற்று நடத்தினான். அவன் இதுகுறித்து கூறுகையில் ‘‘போராட்டத்தில் நாங்கள் இருக்கிறோம். உங்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்புகிறோம். ஏனென்றால் நீங்கள் எப்போதும் மொபைல் போன்களை மட்டும் தான் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.

இந்த போரட்டத்துக்கு பிறகாவது பெற்றோர்கள் செல்போன்களை பார்ப்பதை விட்டுவிட்டு குழந்தைகளை பார்ப்பார்கள். தொடர்ந்து குழந்தைகளை தவிக்க விடும் ற்றோருக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் கூறினான்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here