அநுராதபுரம் சிறைச்சாலையில் அரசியல்கைதிகளை நேரில் சந்தித்தார் சுமந்திரன்!

அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இன்று மாலை சந்தித்து பேசியுள்ளார்.

அனுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல்கைதிகள் பத்துப் பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் வழக்கு விசாரணைகள் அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வருடம் ஆரம்பத்தில் இருந்து, அரசதரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றத்திற்கு சமூகமளிக்காமல் இருந்து வருகிறார்கள்.

தமது வழக்குகளை துரிதப்படுத்த வேண்டும், அல்லது வழக்குகளை இடைநிறுத்தி புனர்வாழ்விற்கு ஏற்பாடு செய்ய வேண்டுமென வலியுறுத்தி எட்டு அரசியல் கைதிகள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இராசதுரை ஜெகன், இராசவல்லவன் தபோரூபன், மதியரசன் சுலக்சன், இராசதுரை திருவருள், சிவசுப்ரமணியம் தில்லைராஜ், சூரியகாந்தி ஜெயசந்திரன், சிவப்பிரகாசம் சிவசீலன், தங்கவேல் நிமலன் ஆகிய எட்டு தமிழ் அரசியல்கைதிகளே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று மாலை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு நேரில் சென்று அரசியல்கைதிளை பார்வையிட்டார். தமது வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்த அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென அரசியல்கைதிகள் கோரிக்கை விடுத்தனர்.

ஜனாதிபதி, பிரதமர், சட்டமா அதிபர் ஆகியோருடன் பேசி இதற்கு விரைவில்- இரண்டு மூன்று தினங்களிற்குள்- முடிவொன்றை பெற்றுத்தர முயற்சிப்பதாக சுமந்திரன் தெரிவித்தார். அதுவரை உணவு தவிர்ப்பை தவிர்த்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டிருந்தார்.

எனினும், உணவு தவிர்ப்பை கைவிட மறுத்து தொடர்ந்து அரசியல்கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வடமாகாணசபை உறுப்பினர் கே.சயந்தனும் அரசியல்கைதிகளை பார்வையிட சென்றிருந்தார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here