கோட்டா அரசிற்கு காலஅவகாசம் வழங்கும் புதிய பிரேரணைக்கு ஆதரவு திரட்ட கூட்டமைப்பு தீர்மானம்!

தமிழ் தேசியகூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டம் இன்று கொழும்பில் இடம்பெற்றது. இரா.சம்பந்தனின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இன்றைய கூட்டத்தில் பேச்சாளர், கொறடா பதவிகளில் மாற்றம் செய்ய திட்டமிடப்பட்ட போதும், 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்றைய கூட்டத்திற்கு சமூகமளிக்கவில்லை. த.சித்தார்த்தன், வினோ நோகராதலிங்கம், சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் இன்றைய கூட்டத்தில் சமூகமளிக்கவில்லை. இதனால், எதிர்வரும் 5ஆம் திகதி மீண்டும் கூடி இந்த விடயத்தை ஆராய்வதென முடிவாகியது. அன்றைய தினம் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்டாயமாக சமூகமளிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.

கொறடா, பேச்சாளர் பதவிகளை விட்டுக்கொடுப்பதில்லையென ஆரம்பத்தில் தமிழ் அரசு கட்சி எம்.பிக்கள் தீர்மானித்திருந்த போதும், இந்த விவகாரத்தல் தமிழ் அரசு கட்சி எம்.பிக்களின் நடவடிக்கைகள் பற்றிய தகவல்கள் ஊடகங்களில் வெளியாக தொடங்கியதும், தற்போது பதவிகளை விட்டுக் கொடுக்கும் முடிவிற்கு வந்துள்ளனர்.

கடந்த 10ஆம் திகதியின் பின்னர் கொறடா தொடர்பான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடமாட்டேன்  என சிறிதரன் குறிப்பிட்டார்.

புதிய அரசியலமைப்புக்கான யோசனை சமர்ப்பிப்பது பற்றியும் ஆராயப்பட்டது.

பின்னர், ஜெனிவா விவகாரம் குறித்து பேசப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திர் இது பற்றி குறிப்பிடுகையில், முற்றிலும் புதிய பிரேரணையொன்று இம்முறை சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதில் இலங்கைக்கு காலஅவகாசம் வழங்கப்படும். நாம் அதனுடன் உடன்படாவிட்டால், இலங்கை விவகாரம் பேசப்படாமலேயே போய்விடும். உடனடியாக இந்த விவகாரம் பாதுகாப்பு சபைக்கோ, சர்வதேச நீதிமன்றத்திற்கோ செல்ல வாய்ப்பில்லை.

அதனால், இந்த பிரேரணைக்கு எம்மால் முடிந்தளவு ஆதரவை திரட்ட வேண்டும். பொது அமைப்புக்கள், கட்சிகளுடன் பேசி ஆதரவை திரட்டுவோம் என கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here