சீனா, இந்திய ஆண்களால் இலங்கைப் பெண்கள் படும் அவஸ்தை!

கொழும்பு இராஜகிரிய பகுதியில் இயங்கும் கட்டுமான நிறுவனங்களினால் அந்த பகுதி மக்கள் பெரும் அசளகரியங்களை சந்திப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தில் பணியாற்றும் சீனா, இந்திய தொழிலாளர்களாலேயே மக்கள் அசௌகரியங்களை சந்திக்கிறார்கள்.

கட்டுமான பணி முடிந்ததும், மாலை மங்கிய சமயங்களில் அந்த பகுதியில் இரண்டு நாட்டு தொழிலாளர்களும் குழுமியிருக்கிறார்கள்.

மது அருந்துவது, வெற்றுடம்புடன் வீதியில் இருப்பது, யுவதிகளுடன் சில்மிசம் பண்ணுவது என அவர்களின் நடத்தையால், மாலையானாலே பெண்கள் வீட்டை விட்டு வெளியில் வர மக்கள் அச்சப்படுகிறார்கள்.

அத்துடன் முச்சக்கர வண்டி சாரதிகளின் மூலம் வெளியிடங்களில் இருந்து விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களும் அங்கு கொண்டு வரப்படுகிறார்கள். இதில் அதிகமானவர்கள் சிறுமிகள் என மக்கள் குற்றம்சுமத்துகிறார்கள். காலையில் வீதிக்கிறங்கினால், அதிக ஆணுறைகளே வீச்சப்பட்டிருப்பதாகவும் குற்றம்சுமத்தியுள்ளனர்.

இந்த விவகாரம் சமூக வலைத்தளங்கள், இணையத்தளங்களில் வெளியாகி, அதிகம் பரபரப்பாகியுள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here