பாதிரியார்கள் மீதான பாலியல் புகாருக்கு காரணம் சாத்தான்!

பாதிரியார்கள் மீதான பாலியல் புகார் குற்றச்சாட்டின் பின்னணியில் சாத்தான்கள் உள்ளதாக போப் பிரான்சிஸ் கூறியுள்ளார்.

சமீப காலமாக பல நாடுகளில் பாதிரியார்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இது பரவலாக சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவிலும், கன்னியாஸ்திரியை பலாத்காரம் செய்த புகாரில் ஜலந்தர் பிஷப் பிராங்கோ முல்லக்கல் பதவி விலகினார். அமெரிக்காவில் தியோடர் மெக்காரிக் என்ற பாதிரியார் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் வத்திக்கானில் சென்ற் பீட்டர் சதுக்கத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் போப் பிரான்சிஸ் பேசும்போது, பாதிரியார்கள் மீதான குற்றச்சாட்டுகளை குறிப்பிடும் வகையில், ”பாலியல் குற்றச்சாட்டுகளின் பின்னணியில் சாத்தான்கள் உள்ளன. பிஷப்களின் நற்பெயரை கெடுக்க அவர்களுக்குள் இருக்கும் சாத்தான்கள் இப்படி செய்கிறது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here