‘டூப்’ போடாத போராளி வைகோ: நடிகர் சத்யராஜ் பேச்சு

‘டூப்’ போடாத போராளியாக வைகோ விளங்குகிறார். அவரைப் பற்றி சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் போடுபவர்கள் ஒருநாளாவது அவரைப்போல் வாழ்ந்து பார்க்க வேண்டும் என்று நடிகர் சத்யராஜ் பேசினார்.

பெரியார் பிறந்த நாள் விழா, அண்ணா பிறந்த நாள் விழா, மதிமுக வெள்ளி விழா – வைகோவின் பொது வாழ்வு பொன் விழா என, மதிமுக சார்பாக இன்று (சனிக்கிழமை) முப்பெரும் விழா மாநில மாநாடு ஈரோட்டில் நடைபெற்றது. இதில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, திமுக பொருளாளர் துரைமுருகன், தமிழர் வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதில் நடிகர் சத்யராஜ் பேசும்போது, ”வைகோவின் அறிவு, திறமை, ஆற்றல், தியாகத்தை சமுதாயம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் சமுதாயத்திற்குதான் இழப்பு. சமூக அநீதி எது என்று தெரிந்தால்தான், சமூக நீதி எது என்பது புரியும். ‘டூப்’ போடாத போராளியாக வைகோ விளங்குகிறார். அவரைப் பற்றி சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் போடுபவர்கள் ஒருநாளாவது அவரைப்போல் வாழ்ந்து பார்க்க வேண்டும்.

யார் பிரதமரானாலும், முதல்வரானாலும் சமுதாயத்திற்கு நலன் பயக்கும் திட்டங்களை வைகோ ரகசியமாக அவர்களிடம் கொடுத்தால் நாடு நலம்பெறும்” என்றார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here