மொயீன் அலியை ஒசாமா என கிண்டலடித்த அவுஸ் வீரர்!

அவுஸ்திரேலிய அணி தற்போது முற்றிலும் நடத்தை மாற்றத்திற்குச் செல்லும் நிலையில் பழைய சம்பவங்களெல்லாம் கூட தற்போது கிரிக்கெட் அவுஸ்திரேலியா பார்வையில் கடுமையும், கண்டிப்பும் ஆகியுள்ளது.

2015 ஆஷஸ் தொடரில் அவுஸ்திரேலியா வீரர் ஒருவர் ‘டேக் தட் ஒசாமா’ என்று மொயீன் அலியைக் குறிப்பிட்டு ஸ்லெட்ஜ் செய்ததாகப் புகார் எழுந்தது. அவரது தாடி அவர் சார்ந்த முஸ்லிம் மதம் என்று மொயீன் அலியை ஒரு பயங்கரவாதியுடன் ஒப்பிட்டுப் பேசியுள்ளார் அவுஸ்திரேலிய வீரர்.

ஏற்கெனவே ஒருமுறை ஹஷிம் ஆம்லாவை ‘டெரரிஸ்ட்’ என்று வர்ணனை அறையிலிருந்த டீன் ஜோன்ஸ் கூறியதும் பெரிய சர்ச்சையானது.

இப்போது மொயீன் அலி தன் சுயசரிதை நூலில் இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டு எழுதும் போது, “ஒரு அவுஸ்திரேலிய வீரர் களத்தில் என்னை நோக்கி ‘டேக் தட் ஒசாமா’ என்று கூறினார். என்னால் நான் கேட்டதை நம்ப முடியவில்லை. எனக்கு முகம் கடுமையாகச் சிவந்து கடுமையான கோபத்தில் இருந்தேன். நான் கிரிக்கெட் களத்தில் இப்படி கோபமடைந்ததேயில்லை.

இதனை இரண்டு பேரிடம் நான் தெரிவித்தேன், இங்கிலாந்து பயிற்சியாளர் ட்ரவர் பெய்லிஸ் இதனை அவுஸ். பயிற்சியாளர் டரன் லீமேனின் கவனத்துக்குக் கொண்டு வந்தார், அவர் அந்த வீரரை அழைத்து ‘மொயீன் அலியை ஒசாமா என்று அழைத்தாயா?’ என்று கேட்க அவர் அப்படியே பிளேட்டை மாற்றி “இல்லை இல்லை டேக் தட் யூ பார்ட் டைமர் (பகுதி நேர வீச்சாளர்)“ என்றுதான் கூறினேன் என்றார்.

எனக்கு ‘பார்ட் டைமர்’ என்ற வார்த்தைக்கும், ஒசாமா என்ற வார்த்தைக்கும் வித்தியாசம் தெரியாதா?. அவர் மறுத்தார். அன்றைய தினம் நான் போனால் போகிறது என்று விட்டுவிட்டேன். அவுஸ்திரேலிய வீரர்கள் படுமோசமான நடத்தைக் கொண்டவர்கள், அச்சுறுத்தல் எதுவும் இல்லை, ஆனால் அவர்கள் கொடூரமான அராஜகவாதிகள்

நான் அவர் கூறியதை ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று ஆனால் ஆட்டம் முழுதும் நான் கோபமாகவே இருந்தேன். இந்தப் போட்டியில் மொயீன் அலி 92 ரன்களையும் 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இங்கிலாந்தின் தொடர் வெற்றிக்குப் பங்களிப்பு செய்தார். தொடர் முடிந்தவுடனும் அதே அவுஸ்.வீர்ரிடம் மொயீன் அலி மீண்டும் ‘ஒசாமா’ பற்றி கேட்க, அவர் மீண்டும் மறுத்ததுதான் நடந்தது.

இந்நிலையில் இங்கிலாந்திடம் இது குறித்து விளக்கம் கேட்டுள்ள கிரிக்கெட் அவுஸ்திரேலியா, “இப்படிப்பட்ட பேச்செல்லாம் ஸ்லெட்ஜிங் என்ற பெயரில் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. எங்கள் நாட்டின் மதிப்பீடுகளுக்கு இணங்காத இத்தகைய விஷயங்களை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம், இதை வெகு சீரியசாகப் பார்க்கிறோம்.

மேலும் தன் சுயசரிதை நூலில் பந்து சேதமாக்கலில் தடை செய்யப்பட்ட வோர்னர், ஸ்மித், பேங்கிராப்ட் மீது தனக்கு எந்த வித பரிதாபமும் ஏற்படவில்லை, அவர்கள் மிகவும் அராஜகமானவர்கள் என்று எழுதியுள்ளார் மொயீன் அலி.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here