கர்ப்பிணி பெண்ணை தோளில் சுமந்து சென்ற போலீஸ் அதிகாரிக்கு குவியும் பாராட்டுக்கள்!

ஆம்புலன்ஸ் கிடைக்காமல் தவித்த கர்ப்பிணி பெண்ணை தோளில் சுமந்து சென்ற போலீஸ் அதிகாரிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வருபவர் சோனு குமார் ரஜோரா. நேற்று இவர் பணியில் இருந்த நேரத்தில் மதுரா ரயில் நிலையத்தை கடந்து செல்லும் ரயிலில் பயணித்த பாவனா என்ற கர்ப்பிணி பெண்ணிற்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

ஆனால் பாவனாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு ஆம்புலன்ஸ் ஏதும் அருகில் கிடைக்கவில்லை. எனவே ஆட்டோ ரிக்‌ஷா மூலம் மதுரா அரசு மருத்துவமனைக்கு அந்த பெண்ணை அழைத்துச் செல்லும் பணிகளை உடனடியாக சோனு செய்துள்ளார். மேலும் அந்த பெண்ணுடனே மருத்துவமனைக்கு சென்ற சோனு, அங்கு ஸ்ட்ரக்சர் வசதி இல்லாததால் 100 மீட்டர் தூரம் வரை பாவனாவை தோளில் சுமந்து சென்று பிரசவத்திற்கு அனுமதித்துள்ளார்.

தற்போது பாவனாவிற்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. அவரை போலீஸ் அதிகாரி சோனு தன் தோளில் சுமந்து செல்லும் புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலாக பரவியது. இதைக்கண்ட பலரும், சோனுவின் மனிதாபிமானமிக்க செயலை பாராட்டி வருகின்றனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here