மாஸ் காட்டும் மலிங்க: ஆரம்பத்திலேயே பங்களாதேஷ் விக்கெட்டுக்களை வீழ்த்தினார்!

நீண்ட இடைவேளைக்கு பின்னர் இலங்கை அணியில் இடம்பிடித்த வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க, பங்களாதேஷிற்கு எதிரான இன்றைய போட்டியில் அசத்தல் ஆரம்பம் கண்டுள்ளார்.

ஆசிய கிண்ண தொடரின் முதல் போட்டி இன்று இலங்கை- பங்களாதேஷ் அணிகளிற்கிடையில் ஆரம்பமாகியுள்ளது. இந்த தொடரிற்கான இலங்கை அணியில் லசித் மலிங்க இடம்பிடித்துள்ளார். சில காலமாக அவரது போர்ம் சிக்கலாகியிருந்த காரணத்தால், அண்மைக்காலமாக அணியில் இடம்பிடிக்கவில்லை. இலங்கை கிரிக்கெட்டிற்கும் அவருக்குமான உறவும் சுமுகமாக இருக்கவில்லை.

இந்தநிலையில் ஆசிய கிண்ண அணியில் இடம்பிடித்த லசித் மலிங்க இன்று பங்களாதேஷிற்கு எதிராக பந்து வீசி வருகிறார்.

டுபாயில் நடக்கும் போட்டியில், நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக தமிம் இக்பால், லிற்றன் தாஸ் களமிறங்கினர்.லசித் மலிங்க பந்துவீச்சை ஆரம்பித்தார்.

முதலாவது ஓவரிலேயே லிற்றன் தாசை வீழ்த்தினார். மென்டிசிடம் பிடி கொடுத்து ஓட்டம் பெறாமல் ஆட்டமிழந்தார். அடுத்த பந்திலேயே சகில் அப் ஹசனையும் வீழ்த்தினார்.ஒரு ஓட்டத்திற்கு இரண்டு விக்கெட் என பங்களாதேஷ் நெருக்கடியான ஆரம்பம் கண்டது. பின்னர் தமிம் இக்பால் இரண்டு ஓட்டங்களை பெற்ற நிலையில் காயம் காரணமாக களத்திலிருந்து திரும்பினார்.

இதுவரை மலிங்க நான்கு ஓவர்கள் பந்து வீச, ஒரு ஓட்டமற்ற ஓவர் அடங்களாக எட்டு ஓட்டங்களை கொடுத்து இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.

11 ஓவர்கள் முடிவில் 36/2 என பங்களாதேஷ் ஆடி வருகிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here