திரைவிமர்சனம்- த ஸ்டோலன் பிரின்சஸ்

த ஸ்டோலன் பிரின்சஸ்

மாயாஜாலம் மற்றும் சாகசங்கள் நிறைந்த 3டி அனிமேஷன் படம். ஹாலிவுட்டில் தேவதை கதைகளில் வரும் சுவாரஸ்யமான துணை கதைகளும் இருக்கின்றன. இளவரசி மிலாவை, சோர்மோமோர் என்ற தீயசக்தியிடம் இருந்து, ரஸ்லான் என்ற கேரக்டர் எப்படி காப்பாற்றுகிறது என்பது கதை. இதில் அழகான தேவதை, வீரம் மிகுந்த குதிரைகள், தீயசெயல்கள் செய்யும் மந்திரவாதி, வீரர்கள் என பலர் இடம்பெற்றுள்ளனர்.

திடீரென்று ஒருநாள் குதிரை போல் மாறி, மிலா என்ற பெண்ணை சந்திக்கிறார், ரஸ்லான். கண்டவுடன் காதலிக்க தொடங்குகிறார். மன்னரின் மகளான மிலா, இளவரசி என்ற விஷயம் ரஸ்லானுக்கு அப்போது தெரியாது.

இந்நிலையில் அவர்களின் மகிழ்ச்சி நீண்ட நாள் நீடிக்கவில்லை. சோர்மோமோர் என்ற மந்திரவாதி, நீர்ச்சுழல் போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி, ரஸ்லான் முன்பு மிலாவையும், அவள் கண்களில் மறைந்திருந்த காதலையும் தன் மந்திரசக்தியால் களவாடுகிறார். பிறகு ரஸ்லான், சோர்மோமோரின் மந்திரசக்தியை துரத்தி, அவருடைய எல்லா மாயத்தடைகளையும் தகர்த்து, தன் காதல் உண்மையானது என்று நிரூபித்து, இளவரசி மிலாவை மீட்கிறார்.

நல்ல விஷயங்களுக்கும், தீய விஷயங்களுக்கும் இடையே நடக்கும் போராட்டத்தில், அழகான ஒரு காதல் கதையும் இணைந்து வருகிறது. சிறுவர் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. விழிகளை விரித்து வியக்கும் விதமாக, 3டி அனிமேஷன் படமாக வந்துள்ளது. த ஸ்டோலன் பிரின்சஸ் என்ற தேவதை கதைகள், ரஷ்ய நாட்டு கவிஞர் அலெக்சாண்டர் புஷ்கினால் உருவாக்கப்பட்டது. ஓலெக் மாலாமுழ் இயக்கியுள்ளார்.

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here