ஹீரோயின் ஆனார் மகாலட்சுமி!

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் தேவதையை கண்டேன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பொண்ணுக்கு தங்க மனசு தொடர்களில் வில்லியாக நடித்துக் கொண்டிருப்பவர் மகாலட்சுமி. விரைவில் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் கண்ணகி தொடரில் நாயகியாக நடிக்கிறார்.

வில்லியாக இருந்து ஹீரோயினாகியிருக்கும் மகாலட்சுமி, புதிய உற்சாகத்தோடு கண்ணகி தொடரில் நடித்து வருகிறார். இதிகாச கால கண்ணகியின் கதை அல்ல இது. நவீன கண்ணகி. அநீதி கண்டு பொங்குவதாலும், சூழ்நிலைக்கேற்ப அதிரடி முடிவெடுப்தாலும் கண்ணகி என்று தொடருக்கு டைட்டில் வைத்திருக்கிறார்கள். விரைவில் கண்ணகி அவதாரத்தில் காட்சித் தரப்போகிறார் மகாலட்சுமி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here